Monday 19 March 2018

பிரண்டைக் கீரை

பிரண்டைக் கீரை


குடற் புண் , தொண்டைப் புண் , ஆசணப் புண் குணமாக
-----------------------------------------------------
உலர்ந்த பிரண்ட இலையை (100கிராம்), சுக்கு (10 கிராம்), மிளகு(10 கிராம்) ஆகியவற்றுடன் சேர்த்துப் பொடியாக்கி
தினமும் காலையில் 2 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் குடற் புண் , தொண்டைப் புண் , ஆசனப் புண் போன்ற அனைத்தும் குணமாகும்.
மூட்டு வலி , மூட்டுத் தேய்வு , இடுப்பு வலி நீங்க
----------------------------------------------------
பிரண்டை இலை , முடக்கத்தான் இலை ,சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டூ வலி , மூட்டுத் தேய்வு , இடுப்பு வலி போன்ற குறைகள் தீரும்.
மாதவிலக்குப் பிரச்சனை தீர
-----------------------------------------------------
பிரண்டையை இடித்துச் சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குப் பிரச்சனைகள் சரியாகும்.
இளைத்த உடல் பெருக்க
-----------------------------------------------------
பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி ,நெய்யில் வதக்கி ,மிளகு ,உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
இதயம் சார்ந்த பிரச்சனை தீர
-----------------------------------------------------
பிரண்டைத் தண்டுடன் , வாதநாராயணன் இலை ,பூண்டு ,மிளகு ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும்.
பித்த மயக்கம் , உடல் எரிச்சல் நீங்க
-----------------------------------------------------
பிரண்டை இலையுடன் இஞ்சி ,பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம் , உடல் எரிச்சல் போன்றவை விலகும்.

No comments:

Post a Comment