Thursday, 22 March 2018

தர்பூசணி

தர்பூசணி பழத்தின் நன்மைகள்



* தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரிசெய்ய முடியும்.
* கட்டி, ஆஸ்துமா பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய், கீல்வாதம் போன்ற வற்றைத் தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.
* தர்பூசணியில் வைட்டமின்கள், தாதுக்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன.
* உடல் நலத்திற்கு ஊட்டச்சத்து வழங்கக் கூடிய பழவகைகளில் தர்பூசணியும் ஒன்று இது வெயில் காலத்திற்கு ஏற்ற பழம். இதைப் பழமாகவும் பழச் சாறாகவும் சாப்பிடலாம்.
* 100 கிராம் தர்பூசணியில் 90% தண்ணீர், 46 கலோரிகள், 7% மாவுச்சத்து உள்ளது. இதில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட் லிகோபீனின் போன்றவை இதய நோய்கள், புற்றுநோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை உடையவை.
* குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
* தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகள் நிறைந்து உள்ளன.
உடலுக்குத் தேவையான இன்சுலினை யும் மேம்படுத்தும். மேலும், தர்பூசணி சதை, விதை பலன் தரக்கூடியது.
* தர்பூசணி விதையில் ஊட்டச்சத்து அடங்கியுள்ளன. மெக்னீசியம், புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லவை.
தர்பூசணியில் தமனி மற்றும் இரத்த நாளங்களை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால், இது இதயத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
எடை குறைவு:
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாகவும் இருப்பதால், இதனை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொண்டால் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வயாகரா:
தர்பூசணியில் ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கம் அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இது விறைப்புத்தன்மை குறைபாட்டை தடுத்து, நீண்ட நேரம் சந்தோஷமாக இருக்க உதவி புரியும்.
சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்:

தர்பூசணியில் சிறுநீரகத்தில் படிந்துள்ள உப்பை வெளியேற்றி சுத்தப்படுத்தும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் இது யூரிக் ஆசிட்டின் அளவைக் குறைக்கும்.
இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்:

தர்பூசணியில் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளது.
சர்க்கரையின் அளவை குறைக்கும்:

தர்பூசணியை அளவாக உட்கொண்டு வந்தால், அது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
சரும பராமரிப்பு:

தர்பூசணி உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் மிகவும் நல்லது. அதிலும் இது சருமத்தின் நிறத்தைக் கூட்டும் டோனராகவும், சருமத்தின் வறட்சி மற்றும் முதுமையை தடுக்க உதவும் பொருளாகவும்,
முகப்பருக்களை குணமாக்கவும் பெரிதும் துணை புரிகிறது. எனவே அதனை சாப்பிடும் முன், சிறு தர்பூசணி துண்டால், சருமத்தை மசாஜ் செய்யுங்கள்

No comments:

Post a Comment