Thursday 29 March 2018

தர்பூசணி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

தர்பூசணி  திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை: தர்பூசணி - 300 கிராம், பன்னீர் திராட்சை - 50 கிராம், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: 
தர்பூசணியைத் தோல் நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பன்னீர் திராட்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூன்று முறை நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர், தர்பூசணித் துண்டுகள் மற்றும் பன்னீர் திராட்சையை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். இதில், ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் தேன் கலந்து குடிக்கலாம்.
பலன்கள்

திராட்சையில் ‘ரெஸ்வெரட்ரால்’ எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது, மலக்குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய், கரோனரி இதய நோய்கள், அல்சைமர் போன்றவற்றைத் தடுக்கும்.

உடல் பருமனானவர்களும் தேன் சிறிதளவு மட்டும் சேர்த்து அருந்தலாம்.

தேன், தர்பூசணி, திராட்சை மூன்றுமே தோலுக்கு நல்லன.

தாமிரம், துத்தநாகம், இரும்பு நிறைந்துள்ளன. உடனடி ஆற்றல் தேவைப்படும் காலங்களில் இந்த மிக்ஸ்டு ஜூஸை அருந்துவது நல்லது.

No comments:

Post a Comment