Wednesday, 28 March 2018

ஆரஞ்சு - தேன் ஜூஸ்

ஆரஞ்சு - தேன் ஜூஸ்

தேவையானவை: கமலா ஆரஞ்சு - 2, தண்ணீர், ஐஸ் கட்டி, தேன் - தேவையான அளவு.

செய்முறை: கமலா ஆரஞ்சு பழத்தை தோல், விதை நீக்கி, சிறிதளவு தேன், தண்ணீர், ஐஸ் கட்டிகள் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும்.

பலன்கள் 

வைட்டமின் சி நிறைவாக உள்ளது. ஒருநாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி கிடைக்கும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ‘பெக்டின்’ எனும் ரசாயனம், குடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும். 

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. எனவே, புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும். குறிப்பாக, நுரையீரல் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும். 

பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளன. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்துவந்தால், சருமம் பொலிவாகும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

No comments:

Post a Comment