Wednesday 28 March 2018

மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் ஜூஸ்

மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் ஜூஸ்

தேவையானவை: தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிய அன்னாசிப்பழம் - 50 கிராம், முலாம்பழம்  - பாதி, பப்பாளி - 50 கிராம், நடுத்தர வாழைப்பழம் - 1, பச்சை திராட்சை - 25 கிராம், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு (விருப்பப்பட்டால்).

செய்முறை: அன்னாசி மற்றும் திராட்சைப் பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சாறு எடுக்க வேண்டும். இதனுடன், முலாம் பழம், பப்பாளி, வாழை மற்றும் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் அருந்த வேண்டும்.
பலன்கள் 

ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

மலச்சிக்கல், உணவு உண்டவுடன் மலம் கழிக்கும் பிரச்னை (இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்) உள்ளவர்கள், மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள், இதய நோயாளிகள் இந்த ஜூஸை அருந்துவது மிகவும் நல்லது. 

தொடர்ந்து இந்த ஜூஸை எடுத்துக்கொள்வது, புற்றுநோய் ஆபத்தில் இருந்து காக்கும். சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும்.

No comments:

Post a Comment