ராகி கூழ்
தேவையானவை: ராகி (கேழ்வரகு) மாவு - அரை கப், கடைந்த மோர் - 2 கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, வெள்ளரிக்காய் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பாத்திரத்தில் அரை கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். தளதளவென கொதிக்கும்போது, உப்பு, ராகி மாவு சேர்த்து மாவு வேகும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். ஆறியதும், உருண்டைகளாக உருட்டி, தண்ணீரில் போட்டு 8 மணி நேரம் வைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு, கொரகொரப்பாக அரைக்கவும்.
ராகி உருண்டைகளைத் தண்ணீரில் இருந்து எடுத்து கைகளால் கரைக்கவும். இத்துடன் அரைத்த பச்சை மிளகாய் கலவை, சீரகத்தூள், கடைந்த மோர், தேவையான உப்பு, துருவிய வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு கலந்து, ராகி உருண்டைகளை ஊறவைத்த தண்ணீரும் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துப் பரிமாறவும்.
உடலுக்கு குளிர்ச்சி, வயிற்றுக்கு இதம் கொடுக்கும் இந்த ராகி கூழ்... நீண்ட நேரம் பசி தாங்க உதவும்.

No comments:
Post a Comment