Thursday, 29 March 2018

கறிவேப்பிலை - கொத்தமல்லி ஜூஸ்

கறிவேப்பிலை - கொத்தமல்லி ஜூஸ்
தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி,  புதினா - கால் கைப்பிடி, தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, எலுமிச்சை - 1/2 பழம், உப்பு அல்லது தேன் - தேவையான அளவு.

செய்முறை: 
எலுமிச்சையைச் சாறு எடுத்து, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி ஆகியவற்றோடு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்‌ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இதனுடன், எலுமிச்சைச் சாறு  மற்றும் தேவைப்பட்டால் உப்பு அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்

வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் உள்ளன. 

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையில், இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் தேன், உப்பையும், சிறுநீரக நோயாளிகள் உப்பை மட்டும் தவிர்க்கலாம்.

சிறந்த டீடாக்ஸ் ட்ரிங்க் இது. வடிகட்டிப் பருகினால், சத்துக்கள் பெருமளவு குறைந்துவிடும். எனவே, வடிகட்டாமல் குடிப்பதே நல்லது.

No comments:

Post a Comment