Thursday 29 March 2018

வெள்ளரி -ஆரஞ்சு ஜூஸ்

வெள்ளரி -ஆரஞ்சு ஜூஸ்

தேவையானவை: ஆரஞ்சு - 4, நடுத்தர அளவு வெள்ளரி - 1, செலரி - சிறிதளவு, இஞ்சி - நறுக்கியது சிறிதளவு, பனங்கற்கண்டு அல்லது பனஞ்சர்க்கரை - தேவையான அளவு. 

செய்முறை: ஆரஞ்சு மற்றும் வெள்ளரியைத் தோல் நீக்கி, செலரி, இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டிப் பருக வேண்டும். தேவைப்பட்டால், சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள்

ஆரஞ்சு, செலரி, வெள்ளரி, இஞ்சி கலோரி குறைந்தவை. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் `பெக்டின்’ என்ற ரசாயனம், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும்.

உடலுக்குக் குளிர்ச்சி தரும். செலரி ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. செலரிக்குப் பதிலாக புதினா, கொத்தமல்லி சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம்.

செரிமான சக்தியை மேம்படுத்தும். குமட்டலைத் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இந்த ஜூஸை அருந்தலாம். குழந்தைகள், இளைஞர்கள், பெண்களுக்கு ஏற்ற ஜூஸ்.

உணவுக் குழாயில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். வைட்டமின் சி அதிகம் கிடைக்கும் என்பதால், சருமம் பொலிவு பெறும்.

No comments:

Post a Comment