குப்பைமேனி கீரை
குப்பை மேனியின் மருத்துவ பயன்பாடு குறித்து இப்போது பார்ப்போமா...
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
குப்பைமேனி இலை ஓரு பிடி வேப்பம் ஈர்க்கு 10 கிராம் பூவரன்பட்டை 10 கிராம் கல் மண் நீங்கிய ஓமம் 10 கிராம் இன் நான்கினையும் நெகிழ அரைத்து அரிநெல்லிக்காயளவு எடுத்து ஓரு சங்கு விளக்கெண்ணெய்யில் சாப்பிட வயிற்றுக் கிருமிகள் அற்று விழும்
குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். இதையே தலைவலிக்கும் தடவி வர குணமாகும்.
குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டு வர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்து மப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.
குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து லேசாக நசுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கால் டம்ளர் கஷாயமாக்கி வடிகட்டிக் குடிக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமல் நன்கு கட்டுப்படும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் கழுவி வர, பெண்களின் முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும். 10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டு வர, தேக அழகும் ஆரோக்கியமும் ஏற்படும்.
குப்பைமேனியை அப்படியே வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகைப் பொடியை நெய்விட்டு கலந்து இரண்டு வேளை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர பவுத்திரம் குணமாகும்.
குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும். மேலும் குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.
No comments:
Post a Comment