Tuesday, 27 March 2018

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்


எலுமிச்சை சாறு குடிப்பதால்…

எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில் ஒரு நல்ல மருந்துப் பொருளாக இருக்கிறது. சில சமயம், அது அழகுக் கலையிலும், வெகுவாகப் பயன்பட்டு வருகிறது. மருந்து என்று சொல்லும் போது, அதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது தான், முக்கியமான விஷயம். ஒரு முழு எலுமிச்சை பழத்தை, சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் கலந்து, நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால், அது தரும் எனர்ஜியே தனி! எலுமிச்சை சாறு குடிப்பதால், கிடைக்கும் பல அற்புதமான நன்மைகளில் ஐந்தை மட்டும் இப்போது நாம் பார்க்கலாம்.
சமமான பி.எச். அளவுகள்: நம் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில், ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில், எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது, நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக்குறைவைத் தகர்த்து விடுகிறது.
உடல் எடையைக் குறைக்க: உடல் மற்றும் மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடல் எடையைக் குறைக்க முடியும். அல்கலைன் அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ், நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம். உடல் எடையும் குறைந்துவிடும்.
செரிமானம்: நம் உடலில் செரிமானம் மட்டும் ஒழுங்காக இல்லையென்றால், அது பலவிதமான உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும். எலுமிச்சை சாறு சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.
காபிக்கு குட்பை: காபி குடிப்பதால் அவ்வப்போது ருசியும் மணமும் கிடைத்து வந்தாலும், அது நரம்பு மண்டலத்தையும் செரிமானத்தையும் பாதிக்கக் கூடியது. ஆனால், எலுமிச்சையின் பலனை அறிந்து, எலுமிச்சை சாறை தொடர்ந்து அருந்தி வந்தால், காபிக்கு விரைவில் தலை முழுகி விடலாம்.

No comments:

Post a Comment