Thursday, 29 March 2018

சேப்பங்கிழங்கு


சேப்பங்கிழங்கு

இது செடியினத்தைச் சேர்ந்தது. இது வழவழப்பாக இருக்கும். இதில் நான்கு வகைகள் இருந்தாலும் கிழங்கின் நிறத்திலோ, ருசியிலோ, குணத்திலோ வேறுபாடு இருப்பதில்லை.

இதில் இரும்புச் சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் எ, பி ஆகிய உயிர்ச்சத்து சிறிதளவும் இருக்கின்றன.

இருந்தாலும் இக்கிழங்கு கோழையை அதிகரிக்க வல்லது. இதை அதிகமாகவோ, அடிக்கடியோ சாப்பிடுபவர்களுக்குத் தொண்டையில் கோழை கட்டும்; இருமல் வரும்.

ஆகவே இக்கிழங்குடன் புளி சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டாலும், இஞ்சி, வெள்ளைப் பூண்டைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டாலும், கெடுதல்கள் குறையும்.மலச்சிக்கலை நீக்க வல்லது.

நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் குணமுடையது. சில ஆண்டுகளுக்கு பலவீனம் காரணமாகவோ, வயோதிகத்தினாலோ ஆண் தன்மைக் குறைவு ஏற்படும். அத்தகையவர்கள் இந்தக் கிழங்கைச் சாப்பிட்டு வந்தால் ஆண் தன்மைக் குறைவைப் போக்குவதோடு, இந்திரியத்தையும் கெட்டிப்படுத்தும்.
இதை அப்படியே அரைத்து, கட்டிகளுக்கும், புண்களின் மேலும் பற்றாகப் போட்டால் குணமாகும்.

இது வாதத் தன்மையை அதிகரிக்கவல்லது. எனவே வாத தேகம் உள்ளவர்கள் அல்லது வாத நோயால் அவதிப்படுபவர்கள் இக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது.
அத்துடன், இந்தக் கிழங்கு மருந்துகளின் வீரியத்தை மட்டுப்படுத்தும் தன்மை உடையது. அதனால் நோய்க்குச் சிகிச்சை பெற்று வருபவர்களும் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

எப்போதாவது ருசிக்காகக் கொஞ்சம் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment