Wednesday, 28 March 2018

முலாம் தர்பூசணி ஜூஸ்

முலாம்  தர்பூசணி ஜூஸ்

தேவையானவை: 
தோல் சீவி, விதை நீக்கப்பட்ட தர்பூசணி, முலாம் பழத் துண்டுகள் - தலா  ஒரு கப், ஐஸ் கட்டிகள், தேன் - தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணி, முலாம்பழம், தேன் மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, ஐஸ் கட்டிகள் சேர்த்து அருந்தலாம்.
பலன்கள் 

உடலுக்குக் குளுமையைத் தரும். மலச்சிக்கல் நீங்க, ஜீரண மண்டலம் சீராகச் செயல்பட, உடலின் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த உதவும். 

பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம், மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, ஈ, கே, ஃபோலிக் அமிலம், ஃபோலேட், பீட்டாகரோட்டின் உள்ளன. 

உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கவும், வறண்ட சருமத்தைப் பொலிவாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இந்த ஜூஸை அருந்தலாம். 

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு இருப்பதால், வளர்சிதை மாற்றம் சீராக நடக்க உதவும். ரத்த அழுத்தம் சீராகவும், மன அழுத்தம் நீங்கவும், இதய நோய்களில் இருந்து தப்பிக்கவும் இந்த ஜூஸை அடிக்கடி அருந்தலாம்.

No comments:

Post a Comment