Monday, 26 March 2018

கருஞ்சீரகம்

கருஞ்சீரகம்

ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.
கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது. இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.
கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.

தொடர்கருஞ்சீரகத்தின் மிகப் பிரதான அம்ஷமே அதிலுள்ள மருத்துவக் குணம்தான்.

மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று கூறுமளவு இதில் அவ்வளது மருத்துவக் குணங்களும் பயன்களும் இருக்கின்றன. இதனால்தான் இன்றும் பொதுவாக அனைத்து வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். 
அவசர சிகிச்சைக்கு அருமருந்தாகநோய் நிவாரணியாக கருஞ்சீரகத்தை உபயோகப்படுத்துவார்கள். சவுதி போன்ற அரபு நாடுகளில் உணவுடன் கருஞ்சீரக விதைகருஞசீரக எண்ணெய் என்பன சேர்த்துக்கொள்வது வழக்கமான ஒரு விடயம். அதனால்தான் அரபு மக்கள் இதனை ஹப்பதுல் பரகாஹ் – அருள்பாளிக்கப்பட்ட விதை” என அழைக்கின்றனர்.

           

இவ்விதைகளின் மருத்துவக் குணங்கள் தொடர்பாக உயிரியல் மருத்துவ ரீதியாக (Biomedical) பல ஆய்வுகள் செய்யப்பட்டு அவை நிரூபிக்கப்பட்டு அதுபற்றிய 450க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விதையில் அடங்கியுள்ள தைமோ குவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று.
 அத்தோடு உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்கள்கொழுப்பு அமிலங்கள்விட்டமின்,கரோடின்கால்சியம்இரும்புச் சத்துபொட்டாசியம் என பல சத்துக்களை இது கொண்டுள்ளது. 
மனித உடலில் தோன்றும் சுமார் 40 வகையான நோய்களுக்கு இதில் நிவாரணம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  அவை பற்றி மேலோட்டமாகப் பார்ப்போம்.

இன்று நாம் உட்கொள்ளும் உணவுபாணங்களிலும் சுவாகிக்கும்போதும் பல்வேறு நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்கள் உடலுக்குள் சென்று விஷமாக மாறி பல்வேறு நோய்களை உண்டாக்குகின்றன. கருஞ்சீரகத்தில் உள்ள MRSA (Methicillin resistant Staphylococcus aurous) எனப்படும் ஒருவகைப் பொருள் அவ்வாறான இரசாயனத் தாக்கங்களிலிருந்து மனிதனைக் குணப்படுகித்துகின்றன.

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு உதா¬ரணமாக சளி¬யுடன் சம்¬பந்¬தப்¬பட்ட சக¬¬வி¬¬மான நோய்களுக்கும்) கருஞ்சீரகம் அருமருந்தாகக் காணப்படுகின்றது. உதாரணத்திற்கு பீனிசம் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் நோய்குணங்குறியான தும்மல்மூக்கில் இருந்து நீர் வடிதல்தலை வலிமுன் நெற்றிப்பகுதி பாரம் போன்ற நோய்களுக்கு கருஞ்சீரக எண்ணெய்யில்  3 அல்லது 5 துளி ஒரு மூக்குத் துவாரத்தினூடாக காலையில் எழுந்தவுடனும் இரவு படுக்கைக்குச் செல்லும் போதும் இட்டு வருவதுடன் நெற்றிப்பகுதியிலும்உச்சந் தலையிலும் கருஞ்சீரக எண்ணெயினைத் தொடர்ந்து இட்டு அல்லது தேய்த்து வந்தால்சளி தொடர்பான நோய்கள் தீரும்.

• கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.

• சலியால் ஏற்படும் கபம்குளிர் காய்ச்சல்குறட்டைமூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும்.

• கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர்க் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

• கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் தடிமனுக்கு நல்லது.

• 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.

• கருஞ்சீரகத்தைக் காடி (vinegar) வினிகருடன் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலி நின்றுபோகும்.

• கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.

• வெள்ளைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் கலந்து சாப்பிட்டால் உடலிலிருந்து நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.

• கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

• கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.

• நாய்க்கடிபிரசவ இரத்தப் போக்குத் தடங்கல்,கர்ப்பபை வலிசிரங்குகண்வலிபோன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

• தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும்.

• பாலூட்டும் தாய்மார் கருஞ்சீரகம் உண்பதால் பால் சுரப்பைக் கூட்டும்.

• சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.

• கருஞ்சீரகத்தை நீருடன் அரைத்து நல்லெண்ணையில் கலந்து சிரங்குசொறிதேமல் உள்ள இடங்களில் பூசி வர குணம் தெரியும்.

• கருஞ்சீரகத் தூள்கொத்தமல்லித் தூள் இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட்டால் அல்லது கருங்சீரகத் துளை தயிரில் கலந்து  சாப்பிட்டால் அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி குறையும்.

• கருஞ்சீரகத்தை தேன் பானியில் ஊரப்போட்டு அதிகாலை வெறும் வயிற்றுடன் சாப்பிட்டால் ஞாபக சக்தி கூடும்.

• கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது.

• சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டோரின் கணையம் (pancreas) எனப்படும் உடல் உறுப்பில் மடிந்துவரும் அணுக்களை இவ்விதை மறுவுயிர்ப்பிக்கும் ஆற்றலுடையது.

• தலை முடி கொட்டுதல்இளவயதில் தலை முடி நரைத்தல் உள்ளவர்கள் கருஞ்சீரக எண்ணெய்யை நன்கு தேய்த்துவருவதால் இதனைத் தடுக்கமுடியும்.
 இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிடவேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.
கருஞ்சீரகத்தில் ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும்.
தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது.
புற்று நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்தாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது. குறிப்பாக கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. புற்று நோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சுடுநீரில் கலந்து காலையும், மாலையும் பருகலாம். சுடுநீருக்கு பதிலாக தேன் கலந்தும் சாப்பிடலாம்.
சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதனை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடவேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.
பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment