Thursday 29 March 2018

அன்னாசி - வாழை ஜூஸ்

அன்னாசி - வாழை ஜூஸ்

தேவையானவை: வாழைப்பழம் 1, அன்னாசிப்பழம் - 3 துண்டுகள், ஐஸ் கட்டிகள் - 3.

செய்முறை: வாழை மற்றும் அன்னாசிப் பழங்களைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் அரைத்தால் ஜூஸ் ரெடி. 
பலன்கள் 

வைட்டமின் பி மற்றும் சி, பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் இதில் அதிகம். 

கார்போஹைட்ரேட் இருப்பதால், உடனடி எனர்ஜி கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும். 

தினமும் இந்த ஜூஸைக் குடித்துவந்தால், சருமம் இளமைப் பொலிவோடு இருக்கும்.

வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், கருவுற்ற பெண்கள், எடை குறைவாக இருப்பவர்கள், மஞ்சள்காமாலை, சிறுநீரகக் கல் உள்ளவர்களுக்கு ஏற்ற ஜூஸ் இது. 

சிறுநீரகச் செயல்திறன் பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸை அருந்தக் கூடாது.

No comments:

Post a Comment