வெல்லம் - சுக்கு பானகம்
தேவையானவை: பொடித்த வெல்லம் - 50 கிராம், சுக்குப்பொடி - 2 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3.
செய்முறை: வெல்லத்தில் முக்கால் கப் நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, வடிகட்டி ஆறவிடவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டிகள் மற்றும் முக்கால் கப் நீர் சேர்த்துக் கலந்து அருந்தவும்.
No comments:
Post a Comment