சீத்தாப்பழம்
சீத்தாப் பழத்தில் மறைந்துள்ள மருத்துவ நன்மைகள் - இயற்கை மருத்துவம்
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பழங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்திருக்கும்.
சீத்தாப்பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், அதனுள் உள்ள தசைப்பகுதி மிகவும் அருமையான சுவையில் இருக்கும். மேலும் இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. இப்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி என்று செய்து சாப்பிடலாம். உங்களுக்கு பால் பொருட்கள் பிடிக்காதெனில், பாலின் மூலம் பெறும் சத்துக்களை இதன் மூலமாகப் பெறலாம்
ஆரோக்கியமான சருமம் மற்றும் முடி :-
உங்கள் தலைமுடி மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சீத்தாப்பழம் உதவும். ஏனெனில் சீத்தாப் பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இவை ஸ்கால்ப் மற்றும் சருமத்தின் ஈரப்பசையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே கிடைக்கும் போது தவறாமல் சீத்தாப்பழத்தை சாப்பிடுங்கள்.
ஆரோக்கியமான எடை :-
நீங்கள் எடையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், இப்பழம் மிகவும் சிறப்பான ஒன்று. அதற்கு இதனை அரைத்து தேன் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான கலோரி, உடல் எடையை அதிகரிக்க உதவும்.
கருவின் வளர்ச்சி :-
கர்ப்பிணிகள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால், கருவில் வளரும் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவை வலிமையடையும். மேலும் இப்பழம் கருச்சிதைவு மற்றும் பிரசவ வலி நீண்ட நேரம் இருப்பதைத் தடுக்கும்.
ஆஸ்துமாவைத் தடுக்கும் :-
இப்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால், இவை மூச்சுக்குழாயில் உள்ள புண்களைக் குறைக்கும். மேலும் இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஏற்ற பழம்.
மாரடைப்பு :-
சீத்தாப்பழத்தில் மக்னீசியம் வளமாக நிறைந்துள்ளதால், இது மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இது தசைகளை ரிலாக்ஸ் அடையவும் செய்யும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது ஹோமோசைஸ்டீன் சேகரிப்பைத் தடுத்து, இதய நோயில் இருந்து குறைக்கும்.
செரிமானத்தை அதிகரிக்கும் :-
சீத்தாப்பழத்தில் காப்பர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமானத்திற்கு நல்லது. மேலும் இப்பழத்தை அடிக்கடி உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இரத்த அழுத்தம் :-
பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் நிறைந்த இப்பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும். உங்களுக்கு இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், இப்பழத்தை தினமும் உட்கொண்டு வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்
இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது....
பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.
உடலுக்கு உற்சாகம் ஏற்படும்:
மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்
எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:
சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.
இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.
பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.
பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.
சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.
காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.
சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
No comments:
Post a Comment