Thursday, 19 April 2018

காய்கறி பேஸ் பேக்

காய்கறி பேஸ் பேக்

பொலிவிழந்த சருமத்தை பளிச்சென்று பிரகாசமாகவும், வெள்ளையாகவும் காண்பிக்க, இதை செய்து பாருங்க!*
முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்கிறதா, அப்படியானால் பொலிவிழந்து காணப்படும் முகத்தை பளிச்சென்று பிரகாசமாகவும், வெள்ளையாகவும் காண்பிக்க, சரும நிறத்தை அதிகரிக்க உதவும் காய்கறி பேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
*உருளைக்கிழங்கு பேஸ் பேக்*
சில துண்டுகள் உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.பின் அத்துடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், உங்கள் முகப் பொலிவு அதிகரிக்கும்.
*கேரட் பேஸ் பேக்*
2 டீஸ்பூன் கேரட் ஜூஸ் உடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்தாலே முகம் பிரகாசமாக காணப்படும்.
*தக்காளி மாஸ்க்*
தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும்.பின் அதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.பின் 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தாலே, முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

No comments:

Post a Comment