Thursday 19 April 2018

தேங்காய்ப்பால்

தேங்காய்ப்பால்

வைட்டமின் சி, வைட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ்... இவை எல்லாம் தேங்காய்ப்பாலில் அடங்கியுள்ள சத்துகள். உடலின் உள் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் கேச ஆரோக்கியத்திற்கும் உறுதி அளிக்கும் அற்புத பானம் இது. அதன் பலன்கள் இங்கே..!

உடலுக்கு..

* தேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.
* மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய்ப்பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.
* ஆன்டி ஆக்ஸிடன்ட்டான செலீனியம் உள்ளதால், தேங்காய்ப்பால் ஆர்த்தரைட்டிஸின் வீரியத்தைக் குறைக்கும்.
* பேக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்ப்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும்  பேக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கேசத்திற்கு..

* வறண்ட, உடைந்த, நுனி பிளந்த கேசத்திற்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற, தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மஸாஜ் கொடுத்து, 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.

* தேங்காய்ப்பால், ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து ‘ஹெட் பாத்’ எடுக்க, கூந்தல் மினுங்கும்.

சருமத்திற்கு..
* வறண்ட, போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய்ப்பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.

* வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத் தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க, காப்பர் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய்ப்பாலை சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வர, இளமைப் பொலிவு கிடைக்கும்.

* சரும எரிச்சல், சோரியாசிஸ், பேக்டீரியா தொற்று போன்ற பிரச்னைகளுக்கு, தேய்காய்ப்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ, நிவாரணம் கிடைக்கும். 
🥛 எலும்பை இரும்பாக்கும் தேங்காய்ப்பால்.
தேங்காயை உணவில் நேரடியாக பயன்படுத்தாமல்,அதைப் பால் எடுத்துப் பயன்படுத்துவதன் மூலம் நிறைய நோய்களைக் குணப்படுத்த முடியும்.
🥛 இது உடல் சூட்டைக்குறைத்து ஒல்லியாவர்களைச் சற்று பூசினாற் போல பள பளப் பாக மாற்றுவது இதன் தனித்தன்மை,வாய்ப்புண்,வயிற்றுப்புண்களை குணப்படுத்துவதோடு மூளை வளர்ச்சிக்கும் இது பயன்படுகிறது.
🥛 பாஸ்பரஸ்,மாங்கனீஸ்,வைட்டமின்சி,இ, பி1,பி3,பி5,பி6 மற்றும் இரும்புச்சத்து, செலினியம், கால்சியம், தாமிரம் போன்ற பல சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது ஒரு அற்புத பானம்.
ரத்தஅழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.
வயிற்றினுள் பெருண்குடலின் வறட்சித் தன்மையப் போக்கி மலச்சிக்கலை நீக்கும்.
🥛 ஒரு கப் தேங்காய்ப் பாலில் நமக்குத் தினமும் தினமும் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25% கிடைத்து விடுகிறது.
🥛 சரும நோய்களைத் தீர்க்கும். வறண்ட சருமத்தை வளமாக்கும்.
🥛 இளமைப் பொலிவை அதிகரிக்கும்.
🥛 கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
🥛 ரத்த சோகை போன்ற நோய்களையும் தடுத்து விடும்.
🥛 பசியை அடக்கும் ஆற்றல் இருப்பதால்,இதைப் பருகி,உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.
🥛 செலினியம் அதிகம் இருப்பதால் கீல்வாதம்,முடக்கு வாதம் போன்றவற்றைத் தடுக்கிறது.
🥛 பொட்டாசியம் இருப்பதால் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும்.
🥛 வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி,இருமல் போன்ற தொல்லைகளை நீக்கும்.
🥛 இதில் உள்ள பாஸ்பரஸ் எலும்புகளை உறுதியாக்கும். பாஸ்பரஸ் இருப்பதால் மென்மையான எலும்புகள் கொண்ட முதியவர்கள், குழந்தைகளுக்கு இதை தடவி சூரிய குளியல் ஆடச் செய்யலாம்.
🥛 இது எலும்பை கடினமாக்கி வலிமையைத் தரும்.
எலும்புபுரை,எலும்பு வளைதல் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களைச் சரி செய்யும் ஆற்றலும் உண்டு.
🥛 உடலில் உள்ள அமிலத்தன்மை நீக்கும் இந்த சர்வரோக நிவாரணியான தேங்காய்ப் பால் உபயோகித்து பல நன்மைகள் அடைவோம்.
மூல நோய் வராமல் பாதுகாக்கும்.

No comments:

Post a Comment