Wednesday, 11 April 2018

கம்பு

கம்பு


இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தனர். 

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இந்த உஷ்ணத்தை கம்பு போக்குகிறது. 

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பு உதவுகிறது. அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண், வாய் புண்னை கம்பு குணப்படுத்தும். 

கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச் சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது. 

தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் ஏ உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது. 

கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம். 

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும். வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும். 
  • உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும்.
  • கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
  • இதயத்தை வலுவாக்கும்.
  • சிறுநீரைப் பெருக்கும்.
  • நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
  • இரத்தத்தை சுத்தமாக்கும்.
  • உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
  • தாதுவை விருத்தி செய்யும்.
  • இளநரையைப் போக்கும்.

No comments:

Post a Comment