சிறுநீரக கற்களை கரைக்க உதவும் கரும்பு சாறு...!
ஒரு டம்ளர் கரும்புச் சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலக்கவும். உணவுக்கு பின்னர் இதை எடுத்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாகும். செரிமானத்தை தூண்டும்.
உடலை இளைக்க செய்வதில் கரும்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. கரும்பு சாறில் உள்ள இரசாயனங்கள் உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. உடல் எடை குறைவதால் ஏற்படும் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. பயன்படுத்திய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரியும். உடல் எடையை குறைக்க உதவும் கரும்பு எந்தவிதமான பாதக பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
உடலில் சிறுநீரகக்குழாய், பிறப்பு உறுப்பு செரிமான மண்டலக்குழாய் போன்ற பல இடங்களில் தொற்று நோய்களால் எரிச்சல், அரிப்பு போன்றவை உண்டாகும். இதனை சரிசெய்ய ஒரு தம்ளர் கரும்பு சாறு போதும். சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது.
வாய் துர்நாற்றம் இருப்பது சமூகத்தில் நம்மை தாழ்த்தி விடுகிறது. உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பச்சத்தில், நீங்கள் கரும்பு சாற்றை ஒரு தீர்வு தரும் பானமாக கருதி கொள்ள வேண்டும்.
சிறுநீரக கற்களை கரைப்பது கரும்பின் பணி. பொதுவாக உடலில் ஏற்படும் வறட்சியால் இந்த கற்கள் உருவாகும். அதை தடுப்பதற்காகத்தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனெனில் கற்கள் ஏற்படாமல் கழிவுகளை வெளியேற்றி விடும். போதிய தண்ணீர் மட்டுமின்றி கரும்பு சாறும் குடித்தால் இரட்டை பலன் கிடைக்கும்.
கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது. மேலும் இது பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது.
கரும்பில் உயிர்ச்சத்து (வைட்டமின்) மற்றும் கனிமச்சத்துக்களுடன் பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. இதனை உண்பதால் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். இருமல், சளி, தொண்டை வலி இருப்பவர்கள் கரும்பு சாப்பிட மாட்டார்கள். அது தவறானது. இந்த பிரச்சனைகளுக்கு கரும்பே சிறந்தது.
கரும்பு இனிப்பாக இருப்பதால் நீரழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இனிப்பானது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி அளவோடு சாப்பிடலாம்.
No comments:
Post a Comment