Tuesday 3 April 2018

தோல் நோய்களை போக்கும் வேப்பிலை

தோல் நோய்களை போக்கும் வேப்பிலை
 
தோல் நோய்களுக்கு அற்புத மருந்தாக விளங்கும் வேப்பிலையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்க கூடியது வேப்பிலை. இது, வயிற்று புழுக்களை வெளித்தள்ளும். வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது. உள் உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது. அம்மை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. 
.
வேப்பம் பூவை பயன்படுத்தி உடல் தளர்ச்சியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் அளவுக்கு காய வைத்த வேப்பம் பூ எடுக்கவும். இதனுடன் வெந்நீர் விட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். இதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்துவர உடலில் ஏற்படும். தளர்ச்சி நீங்கும். உடல் பலம் பெறும். கல்லீரலை பலப்படுத்தும் மருந்தாக இது விளங்குகிறது. ஆயுள் அதிகரிக்கும். நோய்களை நீக்கும். வேப்பிலை புத்தியை தெளிவுபடுத்த கூடியது. புண்களை விரைவில் ஆற்றும். பித்தம், வாதத்தால் ஏற்படும் நோயை போக்கும். உயிரணு குறைபாடுகளை சரிசெய்யும்.
.
வேப்பங்கொழுந்தை பயன்படுத்தி அம்மை நோய்க்கான உள் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பங்கொழுந்து, அதிமதுரப்பொடி.
செய்முறை: 2 பங்கு அரைத்த வேப்பங்கொழுந்து பசை, ஒரு பங்கு அதிமதுரப்பொடி சேர்த்து கலந்து சுண்டைகாய் அளவு உருண்டைகளாக உருட்டி காய வைத்து, காலை, மாலை என 3 நாட்கள் எடுத்துவர அம்மை கொப்புளங்கள் குணமாகும். காய்ச்சல் விலகி போகும்.
.
வேப்பிலையை கொண்டு அம்மை நோய்க்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பிலை, மஞ்சள் பொடி, வசம்பு பொடி.செய்முறை: அரைத்து வைத்திருக்கும் வேப்பிலை பசையுடன், மஞ்சள் பொடி, வசம்பு பொடி சேர்த்து கலந்து அம்மை கொப்புளங்கள் மீது பற்றாக போட்டு சிறிது நேரத்துக்கு பின் குளித்துவர அம்மை கொப்புளங்கள் சரியாகும். எரிச்சல் இல்லாமல் போகும். வடு மறையும். வேப்பிலையை வீட்டின் முற்றத்தில் வைப்பதால், அது நோய் கிருமிகளை தடுக்கிறது.
.
வேப்பிலையை பயன்படுத்தி கரப்பான் நோய்க்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பிலை, குப்பைமேனி, மஞ்சள்.
செய்முறை: வேப்பிலை பசையுடன், குப்பை மேனி பசை சம அளவு எடுக்கவும். இதனுடன் மஞ்சள் சேர்த்து கலக்கவும். கரப்பான் நோய் இருக்கும்போது, இந்த சாற்றை பூசி வைத்து சிறிது நேரம் கழித்து குளித்துவர கரப்பானால் உண்டாகும் அதிகப்படியான அரிப்பு சரியாகும். வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை போக்கும் மூலிகை வேப்பிலை. இதற்கு இணையான தன்மை கொண்டது குப்பை மேனி. இது, தோல்நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. வண்டுக்கடியை சரிசெய்கிறது. அக்கி நோய்களுக்கு மருந்தாகிறது.
.
அதிக நேரம் நின்று வேலை செய்வதால் ஏற்படும் கால் வலி, எரிச்சலுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு சீரகம், மஞ்சள் அற்புத மருந்தாகிறது. சீரகத்துடன் மஞ்சள் பொடி சேர்த்து கால் ஸ்பூன் அளவுக்கு இருவேளை சாப்பிட்டு வர உடல் வலி, கால் வலி, உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சலை போக்கும். சீரகம், மஞ்சளில் நோய்களை நீக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. வலி நிவாரணியாக விளங்குகிறது.

No comments:

Post a Comment